சென்னை: தமிழில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த அந்த வாரிசு நடிகரின் மார்க்கெட் தற்போது தாறுமாறாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது, நடிகர் நடித்து அடுத்தடுத்து வெளிவந்த 2 படங்களும் மண்ணைக் கவ்வியதில் நடிகர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.
விளைவு தற்போது நலமான படத்தை இயக்கிய இயக்குனருடன் இணைந்து தனது நம்பர் படத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறார், இந்தப் படமும் வெற்றி பெறவில்லையெனில் மீளுவது கடினம் என்ற காரணத்தால் பார்த்துப் பார்த்து படத்தை உருவாக்கி வருகிறார் படத்தை சொந்த செலவிலேயே தயாரித்து வரும் நடிகர்.
அஞ்சாத நடிகையுடன் மீண்டும் இணைந்து நடித்து வரும் இந்தப் படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், தெலுங்கு மொழியிலும் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நம்பர் படத்தின் தெலுங்கு உரிமை சுமார் 20 கோடிக்கு விலைபோயிருக்கிறது.
அடுத்தடுத்து தோல்விப் படங்கள் கொடுத்தாலும் கூட படத்தின் தெலுங்கு உரிமை அதிக விலைக்கு போனதில் தற்போது மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறார் பிரகாச நடிகர். நம்பர் படம் இந்த அளவிற்கு விலை போனதை அறிந்து தமிழ்த் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
நடிகரின் திரைப்பயணத்தில் அதிக விலைக்கு விற்றுப் போன படம் இதுதானாம்...
Post a Comment