சென்னை: வெள்ளாவி புகழ் நடிகை தற்போது அண்ணனின் இயக்கத்தில் வம்பு நடிகர் நடித்து வரும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அம்மணிக்கு உளவு பார்க்கும் வித்தியாசமான கேரக்டராம். இது தொடர்பாக சமீபத்தில் வாய் தவறி பெருமையாக உளறி விட்டார் நடிகை.
ஏற்கனவே படம் உளவு தொடர்பான கதை என்பது லீக் ஆகி விட்டதால் கடும் டென்சனில் இருக்கிறார் டைரக்டர் அண்ணன். இதில், நாயகி தனது கதாபாத்திரம் குறித்த சீக்ரெட்டை உடைத்ததால், அவரது கோபம் மேலும் அதிகரித்து விட்டதாம்.
வெள்ளாவி நடிகையை அழைத்து வெளு வெளு என வெளுத்து வாங்கி விட்டாராம் இயக்குநர்.
படத்தின் டைட்டிலைச் சொன்னாலே இது என்னோடது என கிளம்ப ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. படத்தின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டே இது என்னோட கதை என வழக்குத் தொடுக்க பலர் தயாராக உள்ளனர்.
இந்நிலையில், இப்படி தேவையில்லாமல் பேசி தனது படத்தை பிரச்சினையில் சிக்க வைத்து விடுவாரோ நடிகை என்ற பயமாம் இயக்குநருக்கு.
Post a Comment