பெட்டு, படுக்கையோடு எங்கப்பா கிளம்பிட்டாங்க அஜீத்தும், லட்சுமி மேனனும்...?

|

சென்னை: தல 56 படத்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது, பெட்டி படுக்கைகளுடன் அஜீத் மற்றும் லட்சுமி மேனன் நடந்து வருவது போன்ற அந்த புகைப்படம் ரசிகர்களிடம் தற்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் 56 வது படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படத்தின் கதை காட்சிகள் என அனைத்தையும் பரம ரகசியமாக படபிடிப்புக் குழுவினர் வைத்திருக்கின்றனர், எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியான தல 56 படத்தின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது, குறிப்பாக அஜீத் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

புகைப்படத்தில் தெருவின் இருபுறங்களிலும் மக்கள் மேள தாளங்களுடன் கைதட்டிக்கொண்டு இருக்க நடுவே அஜித்தும், லட்சுமிமேனனும் கையில் பெட்டி படுக்கைகளுடன் நடந்து வருகின்றனர்.

படத்தின் முக்கியமான ஒரு காட்சி அல்லது இறுதிக் காட்சி இரண்டில் ஏதேனும் ஒரு காட்சியின் ஆரம்பமாகவோ அல்லது முடிவாகவோ, இந்தப் புகைப்படம் இருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தாலும் தாடி, மீசை எதுவும் வைக்காமல் மிகவும் இளமையுடன் காட்சியளிக்கிறார் அஜீத், இது அஜீத்தின் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.

எனவே இந்தத் தீபாவளியன்று வெளியாக இருக்கும் தல 56 படத்தை பெரியளவில் கொண்டாடத் தீர்மானித்து இருக்கின்றனர் அஜீத்தின் ரசிகர்கள், இந்தத் தீபாவளி அஜீத்தின் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்...

 

Post a Comment