சென்னை: நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த 10 எண்றதுக்குள்ள படத்தின் ஷூட்டிங் சமந்தாவின் அழுகையுடன் ஒருவழியாக தற்போது முடிந்திருக்கிறது.
சமந்தா-விக்ரம் நடிப்பில் கூட்டணியில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இப்படத்தை ‘கோலிசோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார் காஷ்மீரில் தொடங்கி நேபாளத்தில் முடியும் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட கதையை இந்தப் படம் மூலம் கையில் எடுத்திருக்கிறார் விஜய் மில்டன்.
இடையில் சில பிரச்சினைகளால் நின்று போயிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, தற்போது இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.
10 எண்றதுக்குள்ள படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
A very emotional last day of shoot for #10endruduhkulla . Wonderful team . Wonderful work . So blessed . It's a wrappp!
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) August 29, 2015 இதுகுறித்து அவர் கூறும்போது "ரொம்பவும் அற்புதமான டீம் மற்றும் அற்புதமான பணிகள் இவை கிடைப்பது மிகவும் பாக்கியமான ஒன்று. இன்றோடு படப்பிடிப்பு முடிந்தது,கடைசி நாள் படப்பிடிப்பு ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
‘பத்து எண்றதுக்குள்ள' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது, இதைத் தொடர்ந்து விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முருகதாஸ் இப்போ ஹேப்பி அண்ணாச்சி....
Post a Comment