5000 தியேட்டர்கள்.. சீனாவில் வெளியாகப்போகும் முதல் தென் இந்திய திரைப்படம் பாகுபலி!

|

டெல்லி: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இந்தியாவில் வசூலில் வேட்டையாடிய பாகுபலி திரைப்படம், சீனாவில் 5000 அரங்கங்களில் திரையிடப்பட உள்ளது.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம், பாகுபலி.

Baahubali' to release in 5000 screens in China

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், இந்த படம், ரிலீசாகி சக்கைபோடு போட்டது. இந்த திரைப்படம், சீனாவின் 5000 அரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வெளியிடும் இ ஸ்டார்ஸ் நிறுவனம், ஆமீர் கான் நடித்த பிகே திரைப்படத்தை சீனாவில் வெளியிட்ட அனுபவம் கொண்டது. நவம்பர் மாதத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தென் இந்திய திரைப்படம் ஒன்று, சீனாவில் இப்போதுதான் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'ஐ' திரைப்படத்தை சீனாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

சீனாவில் ரிலீஸ் செய்வதற்காக பாகுபலி திரைப்படத்தில் 20 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளனவாம்.

 

Post a Comment