சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை ராணி முகர்ஜி விரைவில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறப் போகிறார்.
இந்தத் தகவலை அவரது உறவினர் ஜோதி முகர்ஜி உறுதிபடுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குநர் ஆதித்யா சோப்ராவை மணந்து கொண்ட ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான மர்தாணி படத்தின் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார்.
தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் தனது திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார் ராணி முகர்ஜி.
அடுத்த வருடம் 2016 ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜிக்கு குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர், மர்தாணி படத்திற்குப் பின்பு புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாத ராணி முகர்ஜி தற்போது இந்த சந்தோஷ தருணத்தை லண்டனில் தன் கணவருடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.
Post a Comment