சென்னை: ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் அந்த விரல் நடிகர் சமீபத்தில் வெளியான அந்த இரண்டெழுத்து படம் கொடுத்த தைரியத்தில் கிடப்பில் கிடக்கும் தனது படங்களை தூசு தட்டி எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
முதல் படமாக முன்னாள் காதலியுடன் இணைந்து நடித்த ஆளான படத்தை வெளியிட முடிவு செய்து அந்த தேசிய விருது வாங்கிய இயக்குனரை ஒருவழியாக சமாதானப்படுத்தி மீண்டும் சம்மதிக்க வைத்துள்ளார்.
சாமி வரம் கொடுத்தும் பூசாரி தடுத்த கதையாக படத்தின் நாயகியான அந்த நம்பர் நடிகை படத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.
இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் படம் முழுவதும் முடிந்து விடும் இதற்காக நம்பர் நடிகையிடம் கால்ஷீட் கேட்டு சென்றால், என்னால் முடியாது என்று கையை விரித்து விட்டாராம் நடிகை.
கொடுத்த கால்ஷீட்டை எல்லாம் வீணாக்கி விட்டு இப்போது வந்து நடிக்க கூப்பிடுகிறீர்களா? என்னால் முடியாது. முடிந்தால் என்னுடைய சம்பள பாக்கியை கொடுங்கள் என்று நடிகை கேட்டதில் படக்குழுவினர் பயந்து பின்வாங்கி விட்டனர்.
சொந்த கம்பெனி மூலம் படத்தை தயாரித்த நடிகர் இப்போது என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாராம், நடிகரின் இந்தத் தவிப்பை பார்த்தவர்கள் ஷூட்டிங் காலத்தில ஒழுங்கா போய் இருந்தா இப்போ இப்படித் தவிக்கத் தேவையில்லையே என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Post a Comment