ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்தை மிரளவைத்த மாயா!- சக்சஸ் மீட்டில் படக்குழு தகவல்

|

நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தைப் பார்த்து ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்து மிரண்டு விட்டதாக படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Maya (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

மாயா படத்தின் வெற்றிச் சந்திப்பு இன்று சென்னை ரெசிடென்சி டவர்ஸில் நடந்தது.

Maaya Stuns Hollywood Director Eric England

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அஷ்வின் சரவணன், நடிகர்கள் ஆரி, அம்ஜத் கான், ஒளிப்பதிவாளர் சத்யா, படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முதலாவதாக பேசிய நடிகர் ஆரி, "மாயா படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்கத்தான் நான் வெகுநாட்களாக காத்துக்கொண்டு இருந்தேன். நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் துக்கம் விசாரிக்காத குறையாகக் கேட்டார்கள்.

அவர்களுக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லி உள்ளது. படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நேற்று தெலுங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பின்னர் சுதாரித்த அவர், "நீங்கள் மயூரி (தெலுங்கில் படத்தின் தலைப்பு இது) படத்தின் நாயகன்தானே" என்று கேட்டு உறுதி செய்து கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் மாயா படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிக பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது," என்றார்.

Maaya Stuns Hollywood Director Eric England

படத்தின் தெலுங்கு விநியோஸ்தகர் கல்யான் பேசுகையில், "நான் மாயா படத்தை முதல்முறை பார்த்தவுடன் இந்தப் படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிக பெரிய சாதனை," என்றார்.

 

Post a Comment