முன்னாள் காதலியின் தற்கொலை குறித்து முதன்முறையாக "மனந்திறந்த" ஜிம் கேரி

|

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட்டின் தலைசிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான ஜிம் கேரி தனது முன்னாள் காதலியின் மரணம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியிருக்கிறார்.

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. சமீபத்தில் இவரின் காதலி கேத்தரினா வொய்ட்(28) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Jim Carrey 'deeply saddened' by death of Ex Girl friend Cathriona White

கேத்தரினாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியின் மரணம் குறித்து ஜிம் கேரி முதன்முறையாக மவுனம் உடைத்து பேசியிருக்கிறார்.

ஜிம் கேரி

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. கடந்த திங்கள் கிழமை இவரின் முன்னாள் காதலி கேத்தரினா வொய்ட் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது ஹாலிவுட் திரையுலகினரின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் காதலி

கேத்தரினா வொய்ட் நடிகர் ஜிம் கேரியின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. மேக்கப் கலைஞராக இருந்த கேத்தரினா ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்.

காரணம் என்ன

நடிகர் ஜிம் கேரியின் பிரிவே கேத்தரினாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்று ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு மிக அருகில், நெருங்கியவர்களிடம் இருந்து ஒரு ஒளி எனக்கு மிக அருகில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிம் கேரியின் பதில்

ஐரிஷ் மலரைப் போன்றவள் கேத்தரினா. அவளின் இறப்பு எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனது இதயம் என்னைவிட்டு வெளியேறி அவளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்கிறது. நாங்கள் எல்லோருமே அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தோம். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று தனது காதலியின் மறைவு குறித்து ஜிம் கேரி வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முழுமையான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் கேத்தரினா தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

 

Post a Comment