ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா தெலுங்கின் இளம் நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறாராம்.
அக்டோபர் 9 ம்தேதி அனுஷ்கா ராணியாக நடித்திருக்கும் ருத்ரமாதேவி திரைப்படம் வெளியாகிறது, இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
படத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் அல்லு அர்ஜுனின் பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது, இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா ஒரு ஐட்டம் பாடலிற்கு ஆடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றிக் கடனாக இந்தப் படத்தில் அனுஷ்கா ஐட்டம் பாடலிற்கு ஆடுகிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனிற்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கிறார். பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற படங்களினால் புகழ்பெற்ற அனுஷ்கா, இந்தப் படத்தில் ஆடுவதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் அதிகரிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
அனுஷ்காவின் நடிப்பில் அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி ஆகிய 2 படங்கள் வெளியாகின்றன. இதில் இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
ருத்ரமாதேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு தவிர்த்து ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment