விருதுநகர்: புலி பட ரிலீஸுக்கு முன்பு இளைய தளபதி விஜய் மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போதே புலி படம் பற்றி பேசி அதை ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி விஜய் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். கோவிலுக்கு அவர் மாறுவேடமிட்டு சென்றுள்ளார். தலையில் பெரிய தொப்பி போட்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அவர் பிரார்த்தனை செய்கையில் சிலர் அவரை அடையாளம் கண்டுவிட்டார்களாம். இதை உணர்ந்த விஜய் தயவு செய்து இதை யாரிடமும் கூறிவிடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்டாராம்.
தனது படங்கள் ரிலீஸாகும் முன்பு விஜய் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஒரு வேளை அடுத்தபடியாக வேளாங்கண்ணி செல்வார் போன்று.
Post a Comment