திருமதியானார் நடிகை சரண்யா மோகன்... சினிமாவை விட்டு விலக முடிவு

|

சென்னை: நடிகை சரண்யா மோகன் திருமணம் நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆலப்புழாவில் நிகழ்ந்தது, பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை கரம்பிடித்து திருமதி சரண்யா மோகனாக மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் சரண்யா மோகன்.

‘வெண்ணிலா கபடிக்குழு', ‘ஈரம்', ‘வேலாயுதம்', ‘யாரடி நீ மோகினி' போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்த சரண்யா மோகன், தமிழ் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

Actress Saranya Mohan Enters into Wedlock

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் கடந்த ஜூலை மாதம் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். நிச்சயம் செய்து சரியாக 2 மாதங்களில் திருமணத்தை முடிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை ஆலப்புழாவில் சரண்யா மோகன் - அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் நடைபெற்றது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Actress Saranya Mohan Enters into Wedlock

திருமணத்துக்கு பின், சரண்யா மோகன் சினிமா உலகை விட்டு விலகுகிறார். ‘‘இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன்'', என்று அவர் கூறியிருக்கிறார்.

அடிப்படையில் நடிகை சரண்யா மோகன் முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க பல்லாண்டு...

 

Post a Comment