புலியைத் தொடர்ந்து வேதாளத்தில் மைக் பிடித்த "சுருதி"

|

சென்னை: விஜயுடன் இணைந்து புலி படத்தில் ஒரு டூயட் பாடலைப் பாடிய நடிகை சுருதிஹாசன், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

ஒரே சமயத்தில் நடிகர் விஜய், அஜீத்துடன் நடித்து வரும் சுருதிஹாசன் அடுத்தடுத்து இருவரின் படங்களிலும் தலா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

Shruti  Haasan Sing a Song in Ajith's Vedhlam

இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, சுருதி ஹாசன் தனியாக பாடலைப் பாடியிருக்கிறார். அஜீத் - சுருதியின் நடிப்பில் இத்தாலியில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அனிருத் இசையமைப்பில் 3 படத்தில் "கண்ணழகா", மான் கராத்தே படத்தில் "உன் விழிகளில்" போன்ற பாடல்களை ஏற்கனவே பாடியிருக்கும் சுருதி, தற்போது வேதாளம் படத்திலும் பாடியிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து, சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தீபவாளி வெளியீடாக வரும் வேதாளம் படத்தின் ஆடியோ இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அஜீத் ரசிகர்கள் "ஆடியோ" வைக் கொண்டாடி மகிழத் தீர்மானித்து இருக்கின்றனர்.

 

Post a Comment