எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்- அஞ்சலி

|

சென்னை: எனக்கு திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள் இது எனது மனதுக்கு மிகவும் கஷ்டத்தை அளிக்கிறது என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சினைகளால் சிலகாலம் நடிப்பை விட்டு விலகியிருந்த அஞ்சலி தற்போது குடும்ப பிரச்சினைகளில் இருந்து மீண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

“I Am Single and not yet  Married - Says Anjali

ஜெயம் ரவியுடன் அஞ்சலி நடித்த சகலகலாவல்லவன் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் மூன்று படங்கள் அஞ்சலியின் கைவசம் உள்ளன. அஞ்சலி பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

ஒரு தொழில் அதிபரை அஞ்சலி காதலிப்பதாகவும் அவருடன் அஞ்சலிக்கு ரகசியத் திருமணம் நடந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

தற்போது அஞ்சலிக்கு குழந்தை இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இதனைக் கேள்விப்பட்ட அஞ்சலி தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"என்னைப்பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில்தான் இருக்கிறது. திரையுலகம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. இங்கு குனிய குனிய குட்டுவார்கள்.

எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்கால திட்டங்கள் என் கையில் இல்லை கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்".

என்று அஞ்சலி ஹைதராபாத்தில் அளித்த ஒரு பேட்டியில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

 

Post a Comment