சென்னை: நாயகி விண்ணைத்தாண்டி வராத அந்த காதல் படத்தில் அறிமுகமான காமெடி நடிகர், சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓடவைத்திருக்கிறார்.
விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் அவரா அப்படி செய்தார் என்று ஆச்சரியப் படுகிறார்களாம். விஷயம் இதுதான் தன்னுடைய கரகர குரலால் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் காமெடி நடிகரிடம், தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைக்க அணுகினாராம்.
அப்போது, படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளமாக கொடுங்கள் என்று காமெடி நடிகர் கேட்டிருக்கிறார், இதை கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்து விட்டாராம்.
மற்ற படங்களில் நட்புடன் நடித்து வருகிறேன் அதற்கு சம்பளம் என்று எதுவும் வாங்குவதில்லை, இந்த மாதிரி ஆட்கள் கிட்டத்தானே நான் பில்லைப் போட முடியும்? என்று அந்த தயாரிப்பாளரை அழைத்து வந்தவரிடம் நியாயம் வேறு பேசினாராம் காமெடி நடிகர்.
வர வர தமிழ் சினிமாவில காமெடிக்கும் பஞ்சம் வந்துருச்சி...
Post a Comment