சிறந்த நடிகராக பாராட்டுகளைப் பெற்று வரும் கிஷோருக்கு, கபாலி மூலம் புதிய பெருமை.
இந்தியாவின் முதல் நிலை நடிகரான ரஜினியின் படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் என்பதே அந்த பெருமை. படப்பிடிப்பு தொடங்க இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில், கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரஜினியோடு ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உட்பட பலர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மெட்ராஸ் படத்தில் நடித்தவர்களில் 80 சதவீதத்தினர் இந்தப் படத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இவர்களோடு முக்கிய வேடமொன்றில் கிஷோர் நடிக்கிறார். ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்லஅறிமுகத்தைப் பெற்றிருக்கும் கிஷோருக்கு, ரஜினி படத்தில் ஒப்பந்தமானது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாம்.
Post a Comment