கரு.பழனியப்பனின் புது அவதாரம்... உள்ளம் கவர்வானா இந்தக் 'கள்ளன்?'

|

சென்னை: பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ம் ஆண்டில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கரு.பழனியப்பன்.

பார்த்திபன் கனவு திரைப்படம் வெற்றிப் படமாக மாறியதுடன் தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் போன்ற போன்ற படங்களை இயக்கினார். தான் இயக்கிய மந்திர புன்னகை படத்தின் மூலம் நாயகனாகவும் அவதாரமெடுத்த கரு.பழனியப்பன் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Karu. Pazhaniappan's next Movie

கரு.பழனியப்பன் தற்போது புதுமுக இயக்குநர் சந்திரா இயக்கி வரும் ‘கள்ளன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பருத்திவீரன் படத்தில் அமீரின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. நவம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் கரு.பழனியப்பன் வித்தியாசமாக அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் தோன்றுகிறார். விவசாய சமூகத்துக்கு முன்பிருந்த வேட்டையாடிகளின் கதையாம் இது. வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதையாக "கள்ளன்"திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு கரு.பழனியப்பன் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். பின்னர் ‘கிராமபோஃன் என்ற படத்தையும் இவரே இயக்கி நடிக்கவிருக்கிறாராம்.

 

Post a Comment