செல்ல மகளுக்காக போட்டோகிராபர் ஆன ஷாருக்கான்

|

லண்டன்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது செல்ல மகள் சுஹானாவுக்காக போட்டோகிராபர் ஆகியுள்ளார்.

பாலிவுட் பாதுஷா எனப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன், ஆபிராம் என்று 2 மகன்கள் உள்ளனர். மேலும் 15 வயதில் சுஹானா என்ற மகள் உள்ளார். ஆர்யன் மற்றும் சுஹானா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.

படங்களில் பிசியாக இருக்கும் ஷாருக்கான் ஒரு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு தனது பிள்ளைகளை சந்திக்க லண்டன் சென்றுள்ளார். லண்டனில் மகள் சுஹானாவை சந்தித்த ஷாருக்கான் அவரின் தோழிகளுக்கு மதிய விருந்து அளித்துள்ளார்.

அதன் பிறகு சுஹானாவை அவரது தோழிகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துள்ளார் ஷாருக். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒவ்வொரு மகள் மற்றும் அவரின் அருமையான தோழிகளின் வெற்றிகரமான புகைப்படத்திற்கு பின்னால் ஒரு தந்தை இருப்பார். லவ்லி யங் லேடீஸுடன் மதிய விருந்து என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment