சரியான கதை அமைந்ததும் மாயாவின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறினார்.
மாயா படத்தின் வெற்றிக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஸ்வின் சரவணன் கூறுகையில், "மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்ணை மூடிக் கொண்டு நம்பி இந்தப் படத்தை தயாரித்தார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன்.
இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம் என்று புதுப்புதுகதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளைச் சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன்," என்றார்.
Post a Comment