தள்ளிப் போன "புலி" பாடல்... ஸாரி கேட்ட "தேவி ஸ்ரீ பிரசாத்"

|

சென்னை: புலி திரைப்படத்தின் ப்ரோமோ சாங் ஒன்றை நேற்று வெளியிடுவதாக புலி படக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்த அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி மியூசிக் நிறுவனமும் உறுதி செய்தது, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் படத்தின் பாடலை வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் புலி படத்தின் பாடலை நேற்று வெளியிட முடியவில்லை என்று படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.


இது குறித்து அவர் கூறும்போது எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புலி படத்தின் ப்ரோமோ சாங்கை நேற்று வெளியிட முடியவில்லை.

இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்று நண்பகல் 12 மணியளவில் படத்தின் பாடல் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.


இதனை புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதனால் நேற்று பாடல் வெளியாகும் என்று காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் இன்னும் சற்று நேரத்தில் புலி படத்தின் ப்ரோமோ சாங் வெளியாகவிருக்கிறது.

புலி படத்தின் வெளியீட்டுத் தேதி ஏற்கனவே தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடும் தள்ளிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment