பிரபல நடிகை, சமூக சேவகி அமலாவின் மகன் அகிலை தமிழில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.
அமலா - நாகர்ஜூனாவின் மகன் அகில் சினிமாவில் நடிக்கிறார். மனம் என்ற படத்தில் அறிமுகமான அவர், இப்போது அவர் பெயரிலேயே உருவாகும் புதிய படத்தில் (அகில்) நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சி. கல்யாண் அந்த உரிமையைப் பெற்றுள்ளார்.
தமிழில் வெளியாகும் அகில் படத்துக்காக ஒரு பிரமாண்ட விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதில் கலந்து கொண்டு தங்கள் மகனை வாழ்த்தி அறிமுகப்படுத்துமாறு ரஜினிக்கு அமலாவும் நாகர்ஜூனாவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ரஜினியும் விழாவில் கலந்துகொண்டு அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
அகில் படத்தை விவி விநாயக் இயக்கியுள்ளார். அக்டோபர் 22-ம் தேதி வெளியாகிறது.
Post a Comment