கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது.
ஆசியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களையும், புதிய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை திரையிடுகிறது பூசன் சர்வதேச திரைப்பட விழா.
வெற்றிப் படங்கள் மட்டுமல்லாது, புதிய இயக்குநர்களின் படைப்புகளும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 304 படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் 75 நாடுகளில் இருந்து, 121 படங்கள் இடம்பெற உள்ளன. பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் உட்பட தலைசிறந்த உலக சினிமா பிரபலங்கள் இவ்வாண்டு இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கான சினிமாக்களை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் 1-10-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ‘பாகுபலி' திரைப்படம் ‘ஓப்பன் சினிமா' என்ற வகையில் திரையிடப்பட இருக்கிறது. அக்டோபர் மாதம் 4 மற்றும் 7-ம் மற்றும் 9-ம் தேதிகளில் இந்தப் படம் அங்கு திரையிடப்படுகிறது.
படத்தைப் பற்றிய ரசிகர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க எஸ்.எஸ். ராஜமெளலி இத்திரைப்பட விழாவில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment