பாகுபலி அனுஷ்கா மாதிரி ஒரு வேடம் தந்தால் என் திறமையை முழுமையாக நிரூபிக்க முடியும் என்கிறார் ஸ்ரேயா.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது படங்களே இல்லை. கடைசியாக அவர் நடித்த த்ரிஷ்யம் இந்திப் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் போகவில்லை.
ஆனால் எப்படியாவது மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற ஆசையில் தமிழ், தெலுங்குப் பட உலகில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் அவர் கூறுகையில், "தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆனாலும் எனது திறமை முழுமையாக இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவி நடித்தது போலவோ, அல்லது ‘பாகுபலி' படத்தில் அனுஷ்கா நடித்ததுபோன்ற வேடங்களோ கிடைத்தால் என் திறமையை முழுமையாக நிரூபிப்பேன்," என்றார்.
Post a Comment