சென்னை: பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான பாலாஜியை குறி வைத்து ஏன்தான் இப்படி செய்திகள் பரவுகிறதோ தெரியவில்லை. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற வதந்தி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் செல்லமாக "தாடி" பாலாஜி என்றழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் பாலாஜி. இவரை பற்றி கடந்த சில மாதங்களாகவே வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தாடி பாலாஜிதான் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாடி பாலாஜி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. பாலாஜி குறித்த செய்தி திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வதந்திக்கு தாடி பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "பிரஷர் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். இந்த பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை பற்றி திரும்ப திரும்ப வதந்தி வருவது வருத்தம் அளிக்கிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
Post a Comment