வதந்திகளை நம்பாதீங்க.. "நம்மாளு" கண்டிப்பா வரும்...சிம்பு

|

சென்னை: இது நம்ம ஆளு திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு அறிவித்து இருக்கிறார்.

சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது, இந்நிலையில் படத்தை முடித்து வெளியிட படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் முடிவெடுத்தார்.

இதற்காக படத்தின் நாயகி நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு அவர் தர மறுத்ததாக நயன்தாரா மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

Don't Believe any Rumors - Simbu Says in Twitter

டி.ராஜேந்தர் புகார் அளித்த சிறிது நேரத்திலேயே நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை, சிம்புவும் அவரது அப்பா டி.ராஜேந்தரும் சேர்ந்து நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்தனர் என்று படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி தட்டினார்.

இதனால் நேற்று முழுவதும் தமிழ்த் திரையுலகமே பரபரத்துக் கிடந்தது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நயன்தாராவோ "சட்டப்படி நான்தான் அவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்" என்று ஒரு அறிக்கை விட என்னடா நடக்குது இங்க என்று ரசிகர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிக் கிடந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்சகட்டமாக நேற்று பிரச்சினை பற்றி எரிந்தபோது எதுவும் சொல்லாமல் இருந்த படத்தின் நாயகன் சிம்பு தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.


சற்று நேரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது நம்ம ஆளு' குறித்து வெளியாகும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வதந்தி. கண்டிப்பாக திட்டமிட்டபடி படம் வெளியாகும் . நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம்" எனக் கூறியுள்ளார்.

தற்போது தமிழனின் மனநிலை இதுவாகத்தான் இருக்கும் அவ்வளவும் நடிப்பா?

 

Post a Comment