ரஜினியுடன் கபாலி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. வாய்ப்புக் கிடைக்குமா? என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார் நடிகர் சுமன்.
சேலத்தில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பங்கேற்ற மோகன் பேசுகையில், "சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிசாருடன் நடித்தது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. அந்தளவிற்கு எனக்கு அந்த படம் பெயர் பெற்று தந்தது.
இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நான் மீண்டும் பிஸியாகி பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். இந்தியில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் சிவாஜியால்தான். எல்லாவற்றுக்குமே ரஜினி சார்தான் காரணம்.
தற்போது ரஜினிசார் கபாலி படத்தில் நடிக்கிறார். இதிலும் எனக்கு நடிக்க ஆசை. வாய்ப்பு தந்தால் கட்டாயம் நடிப்பேன்.
சினிமா இண்டஸ்டிரி நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். நடிகர்கள், நடிகைகள் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் ரஜினி சார். அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இதைத்தான் அவரது ரசிகர்களும் என்னைப் போன்ற அவரது அபிமானிகளும் விருக்கிறோம்," என்றார்.
Post a Comment