சென்னை: உச்ச நட்சத்திரத்தை வைத்து தான் இயக்கவிருக்கும் படத்தில் வில்லனாக ஹாலிவுட் அல்லது உலகம் முழுவதும் தெரிந்த பாலிவுட் நடிகர்கள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் பிரமாண்ட இயக்குநர்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்த எந்திர மனிதனை மீண்டும் எடுக்கவிருக்கிறார் பிரமாண்ட இயக்குநர்.
முதல் பாகத்தில் நடித்த உச்ச நட்சத்திரமே தற்போது 2 வது பாகத்திலும் நாயகனாக நடிக்கவிருக்கிறார், இளம் இயக்குனரின் கதையில் நடித்து முடித்தவுடன் எந்திர மனிதனின் 2 ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் உச்ச நட்சத்திரம்.
எனவே அதற்குள் கதைக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து விட துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். ஏற்கனவே படத்தின் நாயகியைத் தேடி அலைந்த இயக்குநர் தற்போது வில்லனைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய 2 படங்களில் நடித்த அந்நிய நடிகரை முதலில் ஒப்பந்தம் செய்த இயக்குநர் தற்போது படத்தின் பிரமாண்டம் கருதி அவரை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகரைத் தேடி வருகிறார்.
ஹாலிவுட்டில் அல்லது உலக மகா நடிகர் எவரேனும் தான் வேண்டும் என தயாரிப்புத் தரப்பிடம் அடம்பிடிக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குநர்.
இப்போது தயாரிப்புத் தரப்பு கையை பிசைந்து வருகிறார்கள், வேறு என்ன எல்லாம் சம்பளத்தை நினைத்துதான். உள்ளூர் நடிகர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லை.
இப்போது உலக மகா நடிகர் (வில்லன்) எனில் எங்கு போவது என தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம், தயாரிப்புத் தரப்பினர்.
எங்கும் பிரமாண்டம், எதிலும் பிரமாண்டம்...
Post a Comment