விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக அவர் நடித்த படம் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதுதான் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புலி.
இதுவரை விஜய் படங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வெளியாகும். ஆனால் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகி வந்தன. அதேபோல நேரடித் தமிழ்ப் படமாகவே கேரளாவில் நூறுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகு வசூல் குவித்து வந்தன விஜய் படங்கள்.
இப்போது ஆந்திராவில் தமிழ் மற்றும் தெலுங்கில் புலி படம் வெளியாகிறது. வட மாநிலங்களில் இந்தியில் டப்பாகி வெளியாகிறது.
கர்நாடகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலுமே இந்தப் படம் வெளியாகிறது. வழக்கத்தை விட அதிக அரங்குகளில் மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.
மொத்தம் 2000க்கும் அதிகமான அரங்குகளில் புலியை வெளியிடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.
விஜய் படம் இத்தனை அரங்குகளில், இத்தனை மொழிகளில் உலகெங்கும் வெளியாவது இதுவே முதல் முறை!
Post a Comment