சென்னை: இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் 25 படங்கள் தாண்டுவதே ஒரு சவாலாக உள்ளபோது, நடிகை மனோரமா 15௦௦ படங்களில் நடித்திருப்பது பெரும் சாதனையாக திரையுலகில் பார்க்கப்படுகிறது.
இடையில் சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்த மனோரமா தற்போது "சிங்கம் 3" படத்தின் மூலம், மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.
சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தான் நடிக்கவிருக்கும் படங்கள் மற்றும் தனது எதிர்காலத் திட்டம் போன்றவைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
கடவுள் அருளால் எனக்கு 1500 படங்களுக்கு மேல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் இருந்தவர் என் அம்மா தான். அவரில்லாமல் இருப்பது வருத்தமான விஷயமே.
இப்போதும் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. என் உடல் நிலை காரணமாக நிறையப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை எனக் கூறியுள்ளார் மனோரமா.பேராண்டி மற்றும் சிங்கம் 3 போன்ற படங்களில் தற்சமயம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கியக் காரணம் கண்ணதாசன் தான். நீ ஹீரோயினாக நடித்தால் கண்டிப்பாக 3 அல்லது 4 வருடங்களில் உன்னை மக்கள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கி விடுவார்கள் எனக் கூறி என்னை காமெடி நடிகையாக்கி என்னால் முடியும் என நம்பியவர் அவர் தான்.
ஒருவேளை சினிமாவிற்குள் வரவில்லையெனில் என் அம்மாவின் ஆசை நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே. அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால் இப்போது என் பேரன் டாக்டர். இந்த வருடத்தில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அடுத்த பிறப்பிருந்தால் அதிலும் இதே மனோரமாவாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார் மனோரமா.
இன்னும் நிறைய காலம் தாங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறோம் ஆச்சி....
Post a Comment