கபாலியில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கவிருந்த பிரகாஷ் ராஜ், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கபாலி' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே இதுவரையில்லாத அளவுக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.
ஏன் விலகினார்?
இந்தப் படத்துக்காக தொடர்ச்சியாக 60 கால்ஷீட் தேவைப்பட்டததாம். ஆனால், பிரகாஷ் ராஜ் தற்போது பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், தொடர்ச்சியாக 60 நாட்கள் ஒதுக்கித் தர முடியவில்லையாம்.
இதனாலயே இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறியுள்ள பிரகாஷ்ராஜ், "ரஜினியுடன் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது," என்றும் கூறியுள்ளார்.
‘கபாலி' படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
Post a Comment