நடிகர் ராம்கி மீண்டும் தன் அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கிறார் கோடம்பாக்கத்தில்.
மாசாணி, பிரியாணி போன்ற படங்களில் சமீபத்தில் நடித்த அவர், இப்போது இங்கிலீஷ் படம் என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
புதுமுகம் குமரேஷ் என்பவர் இயக்கும் இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு இதை மட்டுமே கூறிய இயக்குநர் மற்ற விஷயங்ளை விரைவில் அறிவிப்போம் என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது, "இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது,வில்லனும் கிடையாது ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும்," என்றார்.
படத்தை பற்றி நடிகர் சஞ்சீவ் கூறும் போது, "நான் குளிர் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். அதையும் சேர்த்தும் 7 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். குளிர் 100 படத்தை தவிர வேறு எந்த படமும் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் இங்கிலீஷ் படம் மூலம் நல்ல அடையாளம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த படத்தில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு அறிமுக நடிகராக உணர்ந்துதான் நடித்து வருகிறேன்," என்றார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.
Post a Comment