சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசர் இன்று இரவு வெளியாகிறது.
வேதாளம் படத்தின் டீசரைப் பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
"அஜீத்தின் வேதாளம் ட்ரெய்லர் பார்த்தேன். இயக்குநர் சிவா மற்றும் குழுவினர் பிரமாதமாக உருவாக்கியுள்ளனர். இன்று இரவு டீசர் வெளியாகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
வேதாளம் படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன், சூரி, ராகுல் தேவ், கபீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாளை விஜய்யின் புலி படம் வெளியாகவுள்ள நிலையில், வேதாளம் டீசர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
வரும் தீபாவளியன்று வேதாளம் திரைக்கு வருகிறது. அன்றுதான் கமல்ஹாஸனின் தூங்கா வனமும் வெளியாகிறது.
Post a Comment