சென்னை: தான் நடித்து வரும் புதிய படத்தில் அனுஷ்காவை நிராகரித்து சமந்தாவை ஹீரோயினாக்குமாறு மகேஷ்பாபு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்ரீமந்துடு' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஸ்ரீமந்துடு வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிரமோற்சவம்' படத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் அதலா பிரமோற்சவம் படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என 3 பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
மகேஷ்பாபு மற்றும் சமந்தாவுடன் இணைந்து சத்யராஜ், ரேவதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் "பிரமோற்சவம்" திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தாவை முதலில் அழைத்த போது ‘கால்ஷீட்' ஒத்துவராததால் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். எனவே, அனுஷ்காவை மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுபற்றி மகேஷ்பாபுவிடம் கேட்டபோது, ‘அனுஷ்கா வேண்டாம்' என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் சமந்தாவிடம் பேசி, கால்ஷீட்டை' அனுசரித்து கொள்ளலாம். நீங்கள் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் சமந்தா நடிக்க சம்மதித்துள்ளார்.
‘ஸ்ரீமந்துடு'வுக்கு முன்பு அனுஷ்காவுடன் மகேஷ்பாபு ஜோடி சேர்ந்து நடித்த ‘ஹலேஜா' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தான் ‘பிரமோற்சவம்' படத்தில் அனுஷ்காவுடன் மகேஷ்பாபு நடிக்க விரும்பவில்லை என்று தெலுங்கு படஉலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.
இளவரசர் ராணியை வேணாமுன்னு சொல்லியிருக்காரு...
Post a Comment