இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியானார் நடிகை விஜயலட்சுமி

|

சென்னை: நடிகை விஜயலட்சுமியின் திருமணம் இன்று காலை நடந்தது, இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியாக மாறினார் நடிகை விஜயலட்சுமி.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, சுமார் 10 க்கும் அதிகமான படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். இயக்குநர் அறிவழகனின் வல்லினம், ஈரம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பெரோஸ் முகம்மதுவை காதலித்து மணந்திருக்கிறார் விஜயலட்சுமி.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பண்டிகை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார் பெரோஸ் முகம்மது. இந்தப் படத்தை விஜயலட்சுமி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹிந்து முறைப்படி கோவிலில் நடந்த இந்தத் திருமணத்திற்கு இரு வீட்டாருடன் சற்று நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்கு முன் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து மணம் புரிந்தாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மதம் மாற மாட்டோம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவோம் என்று விஜயலட்சுமி கூறியிருந்தார்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்குப் பின்பு நடிப்பிற்கு முழுக்குப் போடும் விஜயலட்சுமி, தொடர்ந்து தனது நிறுவனங்களின் தயாரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

வாழ்க பல்லாண்டு என்று நாமும் மணமக்களை வாழ்த்துவோம்....

 

Post a Comment