மலேசியாவில் வரும் 17-ம் தேதி தொடங்குவகாக இருந்த ரஜினியின் கபாலி, இப்போது சென்னையிலேயே ஆரம்பமாகிறது.
கடந்த மூன்று மாதங்களாக மலேசியா மலேசியா என்று கூறி வந்தவர்கள், திடீரென சென்னையிலேயே படப்பிடிப்பைத் தொடங்குவது ஏன்?
இந்தக் கேள்வியை ரசிகர்களும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
நாம் விசாரித்த வரையில்... இதற்கு இரண்டு காரணங்களை பிரதானமாகச் சொல்கிறார்கள்.
ஒன்று மலேசியாவில் உள்ள அரசியல் சூழல். அங்கு அரசியல் நிலையற்ற தன்மை உள்ளதாலும், அடிக்கடி போராட்டங்கள் வெடிப்பதாலும், உடனடியாக அங்கு படப்பிடிப்பை வைத்துக் கொள்வது உசிதமில்லை என்று படக்குழு முடிவு செய்ததாம்.
இரண்டாவது, ரஜினியின் ஏவிஎம் பிள்ளையார் கோயில் சென்டிமென்ட். கடந்த பல ஆண்டுகளாக ரஜினியின் வெற்றிப் படங்களின் முதல் நாள் முதல் காட்சி ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ரஜினி தேங்காய் உடைப்பது போலத்தான் தொடங்கும். இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு காட்சி எடுக்கப்படும் என்கிறார்கள்.
எது உண்மை என்பதை இயக்குநர் ரஞ்சித் வழக்கம் போல ட்விட்டரில் தெளிவுபடுத்தக் கூடும்!
Post a Comment