ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென விலக, அவரது இடத்துக்கு வந்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 'கவலை வேண்டாம்' என்கிற புதிய படம் ஆரம்பமாக இருந்தது. அதில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஜீவா - கீர்த்தி சுரேஷை வைத்து போட்டோஷுட் எடுக்கப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்னையால் கீர்த்தி சுரேஷ் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
படம் தொடங்குவதில் தன்னால் தாமதம் ஏற்பட வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கீர்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு இப்போது காஜல் அகர்வாலுக்குச் சென்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இது என்ன மாயம் படம் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அடுத்து ரஜினி முருகன் வெளியாகவிருக்கிறது. மேலும் நான்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
Post a Comment