மும்பை: பாலிவுட்டின் அழகான நடிகைகளில் ஒருவரான அலியா பட் தனது உடல் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதால், தற்போது வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்த அலியா பட் தற்போது சந்தார் என்னும் படத்தில் ஷாகித் கபூருடன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பிகினி உடையில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் பிகினி காட்சியில் நடிப்பதற்காக அலியா பட் தொடர்ந்து தீவிரமான உடற்பயிற்சிகள் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக, கொண்டுவந்தார்.
ஆனால் அவர் கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையைவிட தற்போது அதிக எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அலியாபட்.
"எனது உடல் எடை தொடர்ந்து குறைந்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கும் செயலாக இருக்கிறது. என்னைப் பார்க்கும் அனைவருமே தொடர்ந்து என்னுடைய உடல் எடையைக் குறித்தே பேசுவது எனக்கு கவலை அளிக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார் அலியா பட்.
உடல் எடை குறைந்ததை நினைத்து ஒருபக்கம் கவலைப்பட்டாலும் மறுபக்கம், எல்லா உடைகளும் இப்போது அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
மேலும் இப்பொழுது எனது தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டிருக்கு பொண்ணு. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலயே...
Post a Comment