நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை ஆதரிக்குமாறு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர் சரத்குமார் தலைமையிலான அணியினர்.
நடிகர் சங்கத்துக்கு வரும் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் இப்போது பொறுப்பில் உள்ள சரத்குமார் தலைமையிலான அணியும், அவர்களை எதிர்த்து விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.
அவரவர் அணிக்கு ஆதரவு திரட்டி தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் இரு அணியினரும்.
திரையுலகின் முக்கிய நடிகர் நடிகைகளைச் சந்தித்தும் ஆதரவு கோரி வருகின்றனர்.
விஷால் அணியினர் ஏற்கெனவே ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினர். அனைத்து விஷயங்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அடுத்து இப்போது சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்தித்தனர். நடிகர் சங்கப் பிரச்சினைகள் குறித்து ரஜினியுடன் பேசி, பிரச்சினைகள் தீர தங்களை ஆதரிக்குமாறு ரஜினியைக் கேட்டுக் கொண்டனர். சரத்குமார் அணியையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் ரஜினி.
Post a Comment