மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பாலிவுட் படத்தில் பாட்டு பாட உள்ளார்.
இந்தி நடிகர் ஜீஷான் காத்ரி மீரூதியான் கேங்ஸ்டர்ஸ் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தில் நடித்ததுடன் திரைக்கதையையும் எழுதியிருந்தார் ஜீஷான். இந்நிலையில் ஜீஷானின் படத்திற்காக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு பாடல் பாடுகிறார்.
இது குறித்து ரெய்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆமாம், நான் திரைப்படத்தில் பாட்டு பாடுகிறேன். மும்பைக்கு வந்து பாடலை பதிவு செய்ய உள்ளேன். எனக்கு பழைய இந்தி பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மீருதியான் கேங்ஸ்டர்ஸ் படத்தில் மெலடி பாட்டை பாடுகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தனது நண்பர் ரெய்னா பற்றி ஜீஷான் கூறுகையில்,
என் படத்தில் பாடல் பாட ரெய்னா சம்மதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிசியாக இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.
மீருதியான் கேங்ஸ்டர்ஸ் வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment