கமல் ரசிகர்களால் தாக்குதலுக்குள்ளான நடிகர் சிவகார்த்திகேயனை போனில் அழைத்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்.
நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, கமல் ஹாஸனை வரவேற்க வந்த சில ரசிகர்கள் தாக்கினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று கமல் ஹாஸன் கூறியிருந்தார்.
இந்தத் தாக்குதல் உண்மைதான் என்று கூறிய சிவகார்த்திகேயன், அதுகுறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மதுரை போலீசார் இதுகுறித்து புகார் பதிவு செய்ய முனைந்தபோதும், சிவகார்த்திகேயன் புகார் தர மறுத்துவிட்டார்.
"நான் இப்போது நலமாக உள்ளேன். பிரச்சினை ஏதுமில்லை", என்று மட்டும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார். 'என்ன நடந்தது...' என்று கேட்டவர், பின்னர் 'பாதுகாப்பா இருங்க..' என்று கூறினாராம்.
Post a Comment