புதுமணத் தம்பதி சாந்தனு - கீர்த்திக்கு விருந்தளித்து மகிழ்ந்த விஜய்

|

சென்னை: புதுமணத்தம்பதி சாந்தனு - கீர்த்தி தம்பதியினருக்கு விருந்து அளித்து அசத்தியிருக்கின்றனர் இளையதளபதி விஜய் - சங்கீதா தம்பதியினர்.

சமீபத்தில் இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் நடந்தது.

சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய வீட்டில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்திருந்து, தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வதித்து சென்றார்.

இந்நிலையில், சமீபத்தில் புதுமண தம்பதிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் விஜய். இந்த தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்தோஷ தருணம் குறித்து சாந்தனு " விஜய் அண்ணாவும், சங்கீதா அக்காவும் எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர். இந்த நாளை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது" என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் பாக்யராஜிற்கு நடிகரும் மக்கள் முதல்வருமான எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். அதே போன்று சாந்தனுவிற்கு விஜய் தாலி எடுத்துக் கொடுத்தார், என்று எம்.ஜி.ஆருடன் விஜயை ஒப்பிட்டுப் பேசியதால் மகிழ்ந்து போன விஜய் இந்த விருந்தை சாந்தனுவிற்கு அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விருந்து முடிஞ்சதும் சாந்தனு இப்படிப் பாடியிருப்பாரோ "இது சங்கீதத் திருநாளோ புது சந்தோஷம் வருநாளோ".

 

Post a Comment