'போர்க்களத்தில் ஒரு பூ படம் வரவிடாமல் தடுத்தார் எஸ்வி சேகர்!'- இயக்குநர் குற்றச்சாட்டு

|

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார் இயக்குநர் கணேசன்.

இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்துள்ளார்.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் எப்போதோ வெளிவரவேண்டியது. ஆனால் சென்சார் குழு இழுத்தடிப்பதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான இலங்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது சென்சார் போர்டு.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் பூர்வீகம், தமிழ்நாடு. வசிப்பது, பெங்களூருவில். 6 கன்னட படங்களை இயக்கியுள்ளேன்.

நான் இயக்கிய முதல் தமிழ்ப் படம் ‘போர்க்களத்தில் ஒரு பூ'. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ' படத்தை இயக்கினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், திரையிட அனுமதி மறுத்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தைப் பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்கச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து, நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்," என்றார்.

 

Post a Comment