'பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் அதிகம் வருவது வழக்கமாகிவிட்டது...'
- வெளியிலிருக்கும் யாரும் இப்படிச் சொல்லி எளிதில் அதைக் கடந்து போய்விடலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் நிலைமை?
அப்படி ஒரு சங்கடத்தை அடிக்கடி சந்திக்கிறார் நடிகை அஞ்சலி. முடிந்தவரை தன்னைப் பற்றி எதையுமே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி தாறு மாறாத செய்திகள் வருவதால் பெரும் கோபமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதாம் அவருக்கு.
அஞ்சலிக்கு அமெரிக்காவில் காதலர் இருக்கிறார் என்று சிலரும், அஞ்சலிக்கு உடல்நலமில்லை, எனவே படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார் என்று சிலரும், அஞ்சலி நாள் கணக்கில் சம்பளம் கேட்கிறார் என்று சிலரும் அடித்துவிட... இதனால் அஞ்சலிக்கு தொழில்ரீதியாக பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சமீபத்தில் தனது நலம் விரும்பிகளிடம், "என்னைப் பற்றி எந்த விஷயமும் தெரியாமலேயே இஷ்டத்துக்கும் சிலர் எழுதுவது வேதனையாக உள்ளது.
இவர்கள் எழுதும் எதுவுமே உண்மை கிடையாது. என்னிடம் விசாரிக்காமல் எதையும் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன். எனக்குப் பிரச்சினை என்ற போது கைகொடுத்ததும் மீடியாதான். அந்த மரியாதையை தொடர விரும்புகிறேன்," என்று கூறி வருந்தியுள்ளார்.
இதனால் சகலமானவர்களுக்கும்....
Post a Comment