சென்னை விமான நிலையத்தில் 'கபாலி' ரஜினி தரிசனம்... பயணிகள், ரசிகர்கள் பரவசம்!

|

சென்னை: கபாலி படத்தின் ஒரு முக்கிய காட்சி இன்று சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினியைப் பார்த்த பயணிகளும் ரசிகர்கள் பரவசத்தில் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைக்க மாட்டார்கள். திரளும் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம் என்று காரணம் கூறி, வெளி மாநிலம் அல்லது ரகசியமான இடங்களில் நடத்துவார்கள்.

Rajini spots at Chennai Airport

ஆனால் இந்த முறை அனைத்து விஷயங்களிலும் ஆச்சர்ய மாறுதல்கள்.

கபாலியின் முதல் கட்ட படப்பிடிப்பே சென்னையில்தான். அதுவும் மக்கள் நெரிசல் மிகுந்த மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புற இடங்கள், வடபழனி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் நடக்கிறது.

இதன் உச்சமாக, பல ஆயிரம் பயணிகள் வந்து போகும் சென்னை விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பு நடந்தது.

Rajini spots at Chennai Airport

விமான நிலையத்தில் ரஜினி நடந்துவருவது போன்ற காட்சி இன்று படமாக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகள் அனைவரும் ரஜினி ஷூட்டிங்கில் நடிப்பதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

பலர் 'தலைவா தலைவா.. நல்லாருக்கீங்களா... கபாலி சூப்பர்' என்று குரல் கொடுக்க புன்னகையுடன் அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டார் ரஜினி.

 

Post a Comment