'அட இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதானப்பா...!' - 'காமெடி திருட்டு' குறித்த கவுண்டரின் கமெண்ட்!

|

கவுண்டமணி - சத்யராஜ் நடிக்கும் ஒரு படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

49 ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கூறுகையில், "கவுண்டமணி சார் தான் எங்களைப் போன்ற பலருக்கும் ரோல் மாடல். என்னை ட்ரெண்ட் நடிகர்னு சொல்றாங்க. உண்மையாவே இப்பவும் ட்ரெண்ட் நடிகர் கவுண்டமணி சார் தான்.

Goundamani's comments on 'comedy imitators'

நான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்கும்போது சத்யராஜ் சார்கிட்ட கவுண்டமணி சாரின் நக்கல்களை கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதையெல்லாம் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு சீக்ரெட்டான காமெடி.

சமீபத்தில் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் அவர் தனது ரிங் டோனை மாற்றி விட்டேன். இப்போது ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் டோன் அப்படின்னு சொன்னாரு. இப்போ சொல்லுங்க யாரு ட்ரெண்ட் செட்டர்னு!

Goundamani's comments on 'comedy imitators'

அவர் கிட்ட பேசும் போது கூட சொன்னேன் 'உங்களோட காமெடிகள் எங்களுக்குள்ள இருக்கு.. தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க திருடித் திருடி வித்துகிட்டுத்தான் இருக்கோம்'னு. இதைக் கேட்டதுமே, "அட இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதுதானப்பா..." என அசால்ட்டாக கமெண்ட் அடித்தார்.

திரும்ப நீங்களும் சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கணும் சார்.. முடிஞ்சா அதுல எனக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார். இதுதான் என் ஆசை.

49ஓ அரசியல் கலந்த விவசாயம் பத்தின படம். அந்த விஷயத்த காமெடி கலந்து சொல்லணும்னா கவுண்டமணி சாராலதான் முடியும். அவர மிஞ்சின ஆள் இதுவரை இல்ல, இனிமேலும் இல்ல. திரும்ப ஸ்கிரீன்ல கவுண்டமணி சார பார்க்கப்போறோம்ங்கற சந்தோஷம் எங்க எல்லாருக்கும் இருக்கு.

எனக்கு உங்கள மீட் பண்ண சான்ஸ் குடுத்ததுக்கு தயாரிப்பாளர் சிவபாலனுக்கு நன்றி.

Goundamani's comments on 'comedy imitators'

(இப்படி சிவகார்த்திகேயன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே கூட்டத்தில் இருந்து கவுண்டமணி சார் மாதிரி பேசுங்க என கேட்டனர்..) சும்மா இருங்க... கவுண்டமணி சார் மாதிரி பேசணுமாம். அப்பறம் அதுக்கும் அவரு கவுண்ட்டர் குடுத்துருவாரு. அதுக்குத்தான் நான் இருக்கேன்ல அவன் என்னாத்துக்கு பேசுறான்னு சொல்லிடுவாரு," என சிவகார்த்தி சொல்ல, அட்டகாசமாகச் சிரித்தார் கவுண்டர்!

 

Post a Comment