சென்னை: விஜயின் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவான புலி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக படத்தின் விஎப்எக்ஸ்(VFX) பணிகள் முடிவடையாததால், படத்தின் வெளியீடு அக்டோபர் 1 ம் தேதி தள்ளிப் போயிருக்கிறது.
அக்டோபர் 1 ம் தேதி விஜயின் புலியுடன் ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி மற்றும் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், ஆகிய 2 படங்களும் மோதப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி படத்தின் வெளியீடை தற்போது தள்ளி வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.
புலியின் ஆக்ரோஷம் அதிகம் இருப்பதால் மோதலை விரும்பாத இஞ்சி இடுப்பழகி தள்ளிப் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மற்றொரு படமான நானும் ரவுடிதான் படம் அக்டோபர் 2 ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது இஞ்சி இடுப்பழகியைப் போல தள்ளிப் போகுமா என்பது தெரியவில்லை.
ஆனால் அதே நேரம் செப்டம்பர் 17 ம் தேதியில் வெளியாகவிருந்த புலி தள்ளிப் போனதால் அந்த தேதியில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், கவுண்டமணியின் 49 போன்ற படங்களுடன் மேலும் 2 படங்களும் களத்தில் குதிக்கின்றன.
புலி பதுங்கினாலும் பிரச்சினை, பாய்ந்தாலும் பிரச்சினை....
Post a Comment