நிக்கி கல்ராணி, ஆனந்தியைத் தொடர்ந்து கீர்த்தியுடன் கூட்டு சேரும் ஜி.வி.பிரகாஷ்

|

சென்னை: நிக்கி கல்ராணி, ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் கீர்த்தி கர்பந்தா என்ற அறிமுக நடிகை நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் உதவியாளர், பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கும் புருஸ்லீ படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்தப் படத்தில் முதலில் நாயகியாக சமந்தா அல்லது நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புரூஸ்லி படத்தில் நாயகியாக கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

G.V.Praksh's next Heroine Kriti Kharbanda

இதுவரை தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நாயகியாக நடித்து வந்த கீர்த்தி கர்பந்தா புரூஸ்லீ திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக தமிழில் காலடி பதிக்கிறார்.

2009 ம் ஆண்டு போனி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி கர்பந்தா, இதுவரை 20 க்கும் அதிகமான தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.

புரூஸ்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ம் ஆண்டு காதலர் தினத்தில் புரூஸ்லி திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழில் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் என்னும் பெயரில் நடிகை ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment