துல்கருக்கு ஜோடியாக ஜான்வி நடிக்கவில்லை - ஸ்ரீதேவி

|

மும்பை: பிரபல இளம்நடிகர் துல்கர் சல்மானுடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடிப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ஜான்வியின் அம்மாவும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவி இதனை மறுத்துள்ளார். "ஜான்வி மிகவும் சிறிய பெண் மேலும் அவள் இப்பொழுதுதான் கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறாள்.

Sridevi has Denied Rumors

ஜான்வி நடிப்பது பற்றிய விஷயங்களை தற்போது திட்டமிட முடியாது. எனது குடும்பத்தினரோ, நானோ நடிப்புத்துறையை பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

ஆனால் விதிவசத்தால் நான் நடிகையாக மாறிவிட்டேன். அதுபோல ஜான்வி நடிப்பது பற்றி நானோ எனது குடும்பத்தினரோ சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் அவள் நடிகையாக மாறுவாளா? இல்லையா என்பது தெரியவில்லை, எல்லாம் விதியின் கைகளில் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார் ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி.

அடுத்த வாரத்தில் ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்திருக்கும் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீதேவி ராணியாகவும் அவரின் மகளாக ஹன்சிகாவும் நடித்திருக்கின்றனர்.

மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து நடிகை சுருதிஹாசன், சுதீப் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் புலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீதேவி நம்பும் விதி ஜான்வியை நடிகையாக்குமா? பார்க்கலாம்...

 

Post a Comment