சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் "தூங்காவனம்" திரைப்படத்தை பெரும் தொகை கொடுத்து மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
கமலின் உதவியாளர் ராஜேஷ் எம்செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தூங்காவனம்.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன, தீபாவளிக்கு இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு படக்குழுவினர் மும்முரமாக வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல்நிறுவனமும், ஸ்ரீகோகிலம்மூவிஸ் படநிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்போது இந்தப்படத்தைத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை, மதனின் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இதற்காகப் பெரிய தொகை ஒன்றைக் கொடுத்திருப்பதாகக் கூறுகின்றனர். இதுநாள்வரை சிவகார்த்திகேயன், விமல் ஆகியோரின் படங்களைத் தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது கமலின் படத்தை வாங்கி வெளியிடவிருப்பதன் மூலம் தன் எல்லைகளை விரிவுபடுத்த முன்வந்திருக்கிறது.
"ஸ்லீப்லெஸ் நைட்" என்ற பிரெஞ்சுப் படத்தின் தழுவலாக உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.
Post a Comment