என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய் - மோகன் ராஜா

|

சென்னை: "இந்த உலகம் என்னை நம்புவதற்கு முன்பு என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய், அவரின் முதல் வரலாற்றுத் திரைப்படமான புலி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா.

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இயக்குநர் மோகன் ராஜாவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் புலி திரைப்படத்தை வாழ்த்தியிருக்கிறார் மோகன் ராஜா.

Vijay Believed in me ev even Before the Whole World did - says Mohan Raja

ரீமேக் படங்களை இயக்கி வெற்றிகண்டு வந்த மோகன் ராஜா, முதன்முறையாக ரீமேக் செய்யாமல் நேரடியாக ‘தனி ஒருவன்' படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். இவர் இயக்கிய இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை மோகன் ராஜா தமிழில் ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ஆறு படங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ‘வேலாயுதம்' படத்தில் விஜய் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தை விஜயின் ரசிகர்கள் பெருமளவில் ஆதரித்திருந்தனர்.

விஜய் நடித்துள்ள ‘புலி' படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இந்நிலையில் பழசை மறக்காத மோகன்ராஜா இப்படம் வெற்றியடைய மனந்திறந்து தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

‘எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் என்னை உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோவான விஜய்யின் ‘புலி' படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று மோகன் ராஜா கூறியுள்ளார்.

 

Post a Comment